yarlminnal

நட்பிற்காக சிவகார்த்திகேயனுடன் வடிவேலு
Like

நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த அளவிற்கு அவரது பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன.

அவரது கொமடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது கொமடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து கொமடி செய்திருந்தார் வடிவேலு.

தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர்.

ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ்
Like

கொலிவுட்டில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

மிகவும் குறுகிய காலத்திற்குள் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இவர் பரதேசி படத்திற்கு பின்பு அன்னக்கொடியும் கொடிவீரனும், தலைவா ஆகிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

மேலும் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தன.

ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஜி.வி., தற்போது மத யானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே சில படங்களில் பாடல் காட்சிகளில் முகம் காட்டி வந்த ஜி.வி.பிரகாஷ், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் விஜய் மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ருதி ஹாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
Like

பாலிவுட்டில் லக் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

ஆனால் படத்தின் தலைப்பில் மட்டுமே லக் இருந்ததே தவிர ஸ்ருதிஹாசனுக்கு லக் அடித்ததாக தெரியவில்லை.

அதேநேரத்தில் தெலுங்கில் பவன்கல்யானுடன் நடித்த கப்பர் சிங் என்ற திரைப்படம் ஆந்திராவின் பட்டி தொட்டியெல்லாம் வசூலை வாரி குவித்துள்ளது.

இப்படத்தின் மூலம் தெலுங்கில் முன்ணனி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

தற்போது தெலுங்கில் பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு படமான கப்பர் சிங் 2 ம் பாகத்தை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதிலும் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் என தகவல் எழுந்துள்ளது.

ஆனால் காஜலின் சம்பள தொகை தயாரிப்பாளர்களை கதி கலங்க வைத்ததால், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ருதி ஹாசனையே ஒப்பந்தம் செய்துள்ளனராம்.

காதலனின் வீட்டுக்கு செல்ல பொலிஸாரின் உதவியை நாடிய மாணவி
Like

காதலனின் வீட்டுக்குச் செல்ல பொலிஸாரின் உதவியை பாடசாலை மாணவியொருவர் நாடியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பெற்றோர் தம்மை துன்புறுத்தி வருவதாகவும், காதலனிடம் செல்ல அனுமதிக்குமாறும் குறித்த மாணவி கோரியுள்ளார்.

பதினைந்து வயதான மாணவி, பாடசாலை சீருடையில் பொலிஸ் நிலையம் சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை செய்ய சென்ற போது, காதலனின் தயாரும் குறித்த மாணவியுடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவி இம்முறை கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

மாணவியின் காதலனின் வயது 20 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகத்தில் சோர்வு நீங்க
Like

கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு

குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிடுங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.

அழகு குறிப்புகள்:தழும்புகள் மறைய….
Like

முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல், உடம்பில் தழும்புகள் இருந்தால் அவரை இலை சாறு பூசலாம். தழும்புகள் மறைந்துவிடும்.

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க, இளம் கொத்துமல்லி இலைகளை எடுத்து சாறு பிழிந்து, அதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவிப்பாருங்கள். தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி உலரவிட்டு பின் கழுவினால் முடி உரிர்ந்து விடும்.

தூக்கமின்மையால் சிலருக்கு அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு அடிக்கடி ஏற்பட்டால் நந்தியாவட்டை பூவால் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.

முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி சீயக்காயுடன் சேர்த்து அரைத்துத் தேய்த்து குளித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

பெண்களுக்குப் பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும். அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.

காதல் ஜோடியை பிரித்த தமன்னா
Like

இயக்குநர் சாஜித் கானை ஜாக்குலைன் பிரிந்துவிட்டார். இவர்கள் பிரிவுக்கு தமன்னாவும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் ஜாக்குலைனை நீக்கிவிட்டு, அவரது எதிரியான தமன்னாவை ஹீரோயினாக புக் செய்திருக்கிறார் சாஜித் கான். இந்தப் படத்தில் சைப் அலிகான் ஹீரோ.

சிவகார்த்திகேயன் – ஹன்சிகா – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி
Like

நடிகை ஹன்சிகா நடித்துள்ள ‘சிங்கம் 2′ படம் ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் ‘பிரியாணி’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா. இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார். அவரிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருந்து வரும் திருக்குமரன் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.

‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போதும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை என்றவுடன் உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்திற்கு ‘மான்கராத்தே’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகாதஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.  சிவகார்த்திகேயன் – ஹன்சிகா – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு கோலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு உள்ளதாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’
Like

பீட்சா படத்தினை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம் ஜிகர்தண்டா. பீட்சா என்று இத்தாலிய உணவின் பெயரை முதல்படத்திற்கு சூட்டிய கார்த்திக் சுப்புராஜ், மதுரையின் பிரபல சுவையான குளிர்பானமான ஜிகர்தண்டாவை அடுத்த படத்திற்கு சூட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா, கருணா, குரு சோமசுந்தர், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தினை ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கதிரேசன் தயாரிக்க இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அழகுக்கு அழகு சேர்க்க என்னவெல்லாம் செய்யலாம்.
Like

முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம்  கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும்.  வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி  இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி  ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும். முகத்தில் அதிக முடியுள்ள பெண்கள் சோப்பை  நன்றாக நுரை வரும் வரை தேய்த்து அந்த நுரையை உதட்டின் மேல் மற்றும் தாடையில் தடவி ப்யூமிங்கல் கொண்டு மெதுவாக தேய்த்தால் முடி  மெதுவாக உதிர்ந்துவிடும்.

வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும்.  தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.  முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.

முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும். கடுகு,  எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு  குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்..

மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகும் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம்.  ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.  பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு  மறையும்.

அமீர் நடிக்கும் பேரன்பு கொண்ட பெரியோர்களே
Like

‘யோகி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான இயக்குனர் அமீர், மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். ‘555’ மிர்த்திகா ஹீரோயின். ‘ஆடுகளம்’ நரேன், பொன்வண்ணன், மனோபாலா, டி.பி.கஜேந்திரன், சுஜாதா, ஸ்ரீரஞ்சனி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய் சக்ரவர்த்தி.

இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், விவேகா, யுகபாரதி. படத்தை இயக்கும் ‘கொள்ளைக்காரன்’ சந்திரன்.எம் கூறும்போது, ‘இதில் அமீர் கேபிள் டி.வி ஆபரேட்டராக நடிக்கிறார். அவருக்கும், மிர்த்திகாவுக்கும் இடையிலான காதலையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது’ என்றார்.

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு
Like

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.

இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.

இது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிறது.

நரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.

சிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்.

வீதியில் நடந்து சென்ற நபரின் உயிரைப் பறித்த பேருந்து: திருமலையில் சம்பவம்
Like

திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிண்ணியா ஊடாக கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் பேருந்தே இவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் சீனக்குடா மீனவர் கிராமத்தில் வசிக்கும் கே.சாந்தகுமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினையடுத்து, பேருந்து சாரதியும் நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!
Like

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள். மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம்.

அதுவே காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர்.

எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால், சந்தோஷமாக இருக்கலாமோ, பெண்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. அவர்களுக்கும் ஆண்களைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில் விழுந்துவிட்டால் நடக்காது. எனவே தற்போதுள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். ” இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று அனுபவசாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்

சுதந்திரப் பறவை

காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம்.

சந்தோஷமாக ஷாப்பிங் செய்யலாம்

பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம்.

வேலையில் கவனம் செலுத்தலாம்

காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம்

காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

ஆண் நண்பர்களுடன் பேசலாம்

சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.

எந்நேரமும் பணம் இருக்கும்

தனி ஒரு பெண்ணாக இருந்தால், பொறுப்புக்களானது மிகவும் குறைவு. மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்பதோடு, விருப்பப்பட்டவாறு செலவழிக்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.

பிடித்ததை செய்யலாம்

பொதுவாக காதல் வந்தால், காதலரைப் பற்றிய நினைவே அதிகம் இருக்கும். தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்காது. ஆனால் தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக்கலாம். பிடித்தவாறு நேரத்தை செலவழிக்கலாம்.

நோ கமிட்மெண்ட்

காதல் செய்யாமல் இருந்தால், யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். பிடித்தவாறு வாழ்க்கையை வாழலாம்.

அரட்டை அடிக்கலாம்

பொதுவாக நாம் நிறைய அழகான ஆண்களை பார்க்கலாம். அதனால் சிலருக்கு அந்த ஆண்களுடன் பேச வேண்டுமென்று தோன்றும். இவை அனைத்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்தால் செய்யலாம். குறிப்பாக, மேற்கூறிய அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும். என்ன நண்பர்களே! சரியா????

முதலில் வெளியாகும் அம்பிகாபதி: தள்ளிப்போனது மரியான்
Like

தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

மேலும், ராஞ்சனா படமானது தமிழில் அமராவதி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை மரியான் ரீலிசான ஒரு வாரத்துக்குப் பின்பு ரீலிஸ் செய்வது என்று முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் மரியான் படமானது தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தணிக்கை குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்துள்ளதால் அப்படத்தின் ரீலிஸ் திகதியை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்போவதாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ராஞ்சனா திரைப்படம் மட்டும் வருகின்ற 21ம் திகதி வெளியாகின்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழில் இதன் ரீமேக்கான அம்பிகாவதி திரைப்படமும், ராஞ்சனா வெளியாகும் திகதியிலேயே வெளியிடப்போவதாக சினிமா சுற்றுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ராஞ்சனா படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்ட தனுஷ் இப்பட ரீலிசுக்குப் பின்பு தான் மரியான் திரைப்படத்திற்கான விளம்பரங்களை தொடங்குவார் என்றும் அதன் பின்னர் இப்படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தினந்தோறும் அமோகாவை காதலிக்கும் வாலிபர்கள்
Like

ஜே. ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமோகா.

அப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது படத்தின் ஒரு படப்பாடல்களில் நடனம் ஆடுவதில் தனது கவனத்தை திருப்பி வருகிறார்.

ஜே.ஜே படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி திரையுலகிற்கு தனது பயணத்தை தொடர்ந்தார்.

இந்தித் திரையுலகில் தனது பெயரை நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தமிழ் படங்களில் ஒரு பட பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.

தற்போது படம் பேசும் என்ற படத்தில் ஒரு படப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிக்கொண்டிருந்த அமோகா ஆட்டத்தின் ஓய்வின் போது ஊடகத்தினரை சந்தித்தார்.

அப்போது திரையுலக அனுபவம் குறித்து அவர்  கூறுகையில், என்னுடைய உண்மையான பெயர் பிரியங்கா கோத்தாரி அந்தப் பெயரிலேயயே திரையுலயில் சாதிக்க விரும்புகிறேன்.

ஜே. ஜே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான போது எனக்கு புதுமையான அனுபவம் கிடைத்தது.

ஆனால் அப்படத்திற்கு பின்பு சரியான வாய்ப்புகள் அமையாததால் தமிழில் கவனம் செலுத்தாமல் பாலிவுட் பட வாய்ப்புக்காக மும்பை திரையுலகில் அடியெடுத்து வைத்தேன்.

இதுவரை தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னட மொழிகளில் 20 படங்களில் நடித்துள்ளதால் இனி தமிழை மிஸ் பண்ணாமல் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தமிழில் ஒரு படப் பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகள் வந்தன. முதலில் இவ்வாய்ப்பினை ஏற்பதற்கு தயங்கினேன் பின்பு ஒரு படத்தின் மூலம் நம் ரசிகர்களை மிஸ் பண்ணினாலும் ஒரு படப் பாடலின் மூலம் அவர்களின் மனதை கவர்ந்து விடலாம் என்று ஒத்துக்கொண்டேன்.

மேலும் தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிமுகம் எனக்கு இல்லாததால் தேடிப்போய் எந்த வாய்ப்புகளையும் கேட்டதில்லை.

இதுவரை தேடிவந்த வாய்ப்புகளையே ஏற்று நடித்துள்ளேன். ஆனால் தமிழில் பாவாடை தாவணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று இல்லை, சினிமாவிற்குள் வந்தால் கிளாமரும் கொஞ்சம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இதனைத்தொடர்ந்து தமிழில் ரஜினி சாருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்றும் அஜித், சூர்யா, மற்றும் விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.

மேலும், திரையுலகில் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது என்றும் அதற்கான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார்.

கிசுகிசுக்கள் குறித்து கூறுகையில், தினம் யாரவது ஒருத்தர் எனக்கு லவ் சொல்லிட்டு தான் இருக்காங்க, அப்படி யாரும் சொல்லலேன்னு சொன்னாதான் அது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி.

ஆனா எனக்கு பிடிச்ச ஒரு ஸ்பெஷல் ஆள் இன்னும் கிடைக்கல. மும்பையில நிறைய பேர் சொல்லிட்டாங்க, லவ் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியம்னு நினைக்கி‌றேன்.

என் திருமணத்தை பெற்றோர் முடிவு செய்தால் கூட, திருமணத்துக்கு முன்னாடியே பார்த்து பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிஞ்சிட்ட அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றார்.

இந்நிலையில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து கூறுகையில், தற்போதைய வாழ்க்கையில் தனது குடும்பத்தார் மற்றும் வேலைகளில் என்னை சந்தோஷப்படுத்தி கொள்வதால் எதிர்காலத் திட்டம் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒரு கால கட்டத்தில் திருமணத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு வாழ விரும்புகிறேன் என்றும் ஆனால் அதற்கு இன்னும் நிறைய காலங்கள் உண்டு எனவும் கூறினார்

க.பொ.த சாதாண தர விண்ணப்ப முடிவுத் திகதி இன்று
Like

2013ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இன்றுடன் முடிவடைகிறது.   எதிர்வரும்  டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கா.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முடிவுத்திகதி இன்றாகும்.   இதுவரை இந்த ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றுபவர்கள்  தமது விண்ணப்பங்களை பூரணப்படுத்தி கிராமசேவகரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.   மேலும்  பாடங்களுக்குரிய கட்டணங்களை உரியமுறையில் செலுத்தி அஞ்சல் அலுவலகத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டினை இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய ராசி பலன் (20.06.2013)
Like

மேஷம்

நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ளும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி ஒன்று வந்து சேரலாம். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

ரிஷபம்

எதிரிகள் விலகும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

கடகம்

தித்திக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். வாகன யோகம் ஏற்படும். பேச்சில் கனிவு பிறக்கும். நூதன பொருட் சேர்க்கை உண்டு.

சிம்மம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். குடும்பத்தில் உடன் பிறப்புகளால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பெண் வழி பிரச்சினைகள் அகலும்.

கன்னி

எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டும் நாள். வீடு சம்பந்தமான பராமரிப்பு பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். நல்லவர்களின் நேசம் கிட்டும்.

துலாம்

குடும்பச்சுமை கூடும் நாள். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வருமானம் பெருக கடினமாக உழைப்பீர்கள்.

விருச்சகம்

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள்.

தனுசு

பம்பரமாக சுழன்று பணி புரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறும் நாள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரு மடங்காகும். தொலைதூரப் பயணங்கள் செல்வதில் அதிக பிரியம் கொள்வீர்கள்.

மகரம்

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டை சீரமைக்கும் பணியில் அதிக ஆர்வம் ஏற்படும். கல்விக்காக தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

கும்பம்

பணப் பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தந்தை வழி உறவினர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் வந்து சேரலாம்.

மீனம்

தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவுக்கு கை கொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். எதையும் நாசூக்காகச் சொல்வது நல்லது.

உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
Like

உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.

மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணனியை உருவாக்கியுள்ளனர்.

டியானி 2(Tianhe 2) என பெயரிடப்பட்டுள்ள இந்த கணனியின் வேகம் நொடிக்கு 33.86 பெடாஃப்லாப்(Petaflap) ஆகும்.

அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரன் போன்ற மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த இந்த சூப்பர் கணனி உதவும்.

மேலும் இந்த கணனியை கொண்டு மிக கடினமாக கணக்குகளை கூட துல்லியமாக செய்து முடிக்கலாம்.

இதுவரையிலும் அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான டைட்டன் என்ற கணனி தான், இதுவரை உலகின் அதிவேக சூப்பர் கணனியாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் காஜல் அகர்வால்
Like

காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால்.

அதன் பின் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான்.

துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது.

தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜில்லாவிலும், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
Like

* எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது.

* ஹேர் கலரிங், கெமிக்கல் ட்ரீட்மென்ட்டை அடிக்கடி எடுக்க வேண்டாம்.

* நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிடவும். தண்ணீர் நிறைய பருகவும். புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

* தேங்காய் எண்ணெய் அரை லிட்டர், நல்லெண்ணை அரை லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு கால் லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சவும். அதன் பின் இதை வடிகட்டி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தேய்த்து வர, இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்
Like

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

• கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

• பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும். அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

• கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா
Like

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார்கள். ‘எங்கேயும் காதல்’, ‘ஆதிபகவன்’, ‘நிமிர்ந்து நில்’ என ஜெயம் ரவி பிஸியாகிவிட்டார்.

ராஜாவும் விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ எடுத்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவியை இயக்குவதற்காக சூப்பர் கதையொன்றைத் தயார் செய்திருக்கிறார் ராஜா.

ஜெயம் ரவியிடமும் கதையை சொல்லி ஓ.கே. வாங்கி விட்டாராம். கல்பாத்தி அகோரம் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்தில், கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது தாக்குதல்
Like

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யசோதரா கதிர்காமத்தம்பி என்ற பல்கலைக்கழக விரிவுரையாளரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

கூரிய ஆயுதமொன்றில் குறித்த மாணவர், பல்கலைக்கழக விரிவுரையாளரைத் தாக்கியுள்ளார். காயமடைந்த விரிவுரையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் பயிலும் மருத்துவர் ஒருவரே அறையொன்றில் வைத்தே குறித்த விரிவுரையாளரை கத்தியால் வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய மாணவர் கூரிய ஆயுதத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை உபயோகித்தவர் குறித்து விசாரணை
Like

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கம் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது.

எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார்.

அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.