கரினாவுக்கு தயாராகிறது திருமண ஆடை

kareena_saifali_002 (1)
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

பிரபல பாலிவுட் நடிகை கரினா கபூருக்கு எதிர் வரும் ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
தனது நீண்ட நாள் காதலரான சயிப் அலிகானை 41, கரினா மணக்க உள்ளார்.

இந்நிலையில் சயிப்பின் தாயும் பிரபல நடிகையும் ஷர்மிளா, பிரபல இந்திய அணி கிரிக்கெட் வீரர் நவாப் பட்டோடியை 1969ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டபோது திருமணத்திற்கு அணிந்த ஆடையை கரினா தனது திருமணத்திற்கு அணிய உள்ளார்.

இந்த ஆடையை இன்னும் மெருகேற்றும் விதமாக ஆடை வடிவமைப்பாளர் ரிதுகுமார் வடிவமைக்கின்றார்.

இந்தியாவின் பிரபல அரச வம்சமான பட்டோடி குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிகர் சயிப் அலிகான். இவரது குடும்ப வழக்கப்படி, திருமணத்தின் போது பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள் அணிந்த ஆடையை அணிவது வழக்கம் ஆகும்.

இதன்படி, கரினா கபூரும் இந்த ஆடையை அணிந்து கொண்டே சயிப்பை திருமணம் செய்ய உள்ளார்.

Filed in: சினிமா
Website Apps