நயன்தாராவின் நட்பால் த்ரிஷாவை தாக்கிய அதிர்ச்சி

trisha14
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

நயன் தாராவுடன் நட்பு பாராட்டிய காரணத்தினால் நடிகை த்ரிஷா, பிரபு இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பொன்றை இழந்து விட்டார்.

தென்னிந்திய நடிகைகளுல் நடிகை த்ரிஷா முன்னணி நடிகை ஆவார்.

கடந்த 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்பு, த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் மிகவும் ஹிட்டானது.

அந்தப் படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போது அதைவிட மிகவும் வேகமான பிரபல்யமானது. மறுபடியும் பல வருடங்களுக்குப் பின் அந்தப் படத்தை பிரபுதேவா இந்தியில் எடுக்கவுள்ளார்.

இது குறித்து பிரபுதேவாவும், த்ரிஷாவும் அவ்வப்போது விருந்துகளிலும் ஒன்றாகக் கலந்துகொண்டு நட்பு பாராட்டிக் கொண்டே இருந்ததால் த்ரிஷா தான் இந்தியிலும் நடிப்பார் என்றே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ரசிகர்கள் மட்டுமன்றி த்ரிஷாவுக்கே திகிலூட்டும் ஒரு செய்தியாக நடிகை ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கிறார் பிரபுதேவா.

சமீபத்தில் நடந்த விருந்தில் த்ரிஷாவும், நயன்தாராவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதை அறிந்த பிரபு இந்த முடிவை எடுத்திருப்பார் என கோடம்பாக்கம் கருதுகின்றது.

முன்செல்ல

Filed in: சினிமா
Website Apps