ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் தொடர்ந்தும் சீனா முதலிடத்தில்

42e3fb6d57d8f608df7e5228a87a2823
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

30ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் தொடர்ந்தும் சீனா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் இதுவரைக்கும் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ள சீனா, ஏனைய நாடுகளை விட தங்கம் நாடு என்ற நிலையில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய நாள் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களோடு காணப்பட்ட சீனா, மேலதிகமாக 2 தங்கங்கள், 4 வெள்ளிகளை நேற்றைய தினம் பெற்று மொத்தமாக 6 தங்கங்கள், 4 வெள்ளிகள், 2 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தில் உள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்கா நேற்றைய தினம் 2 தங்கங்கள், 2 வெள்ளிகள், 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 3 தங்கங்கள், 5 வெள்ளிகள், 3 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அந்நாடு நேற்றைய போட்டிகளுக்கு முன்னர் 3ஆம் இடத்தில் காணப்பட்டிருந்தது. இத்தாலி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகியவற்றை வென்று மொத்தமாக 2 தங்கங்கள், 3 வெள்ளிகள், 2 வெண்கலப் பதக்கங்களோடு 3ஆம் இடத்தில் காணப்படுகிறது.

இத்தாலி நேற்றைய தினப் போட்டிகளுக்கு முன்னதாக 2ஆம் இடத்தில் காணப்பட்டிருந்தது. தென்கொரியா 2 தங்கள், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆகியவற்றோடு 4வது இடத்திலும் பிரான்ஸ் 2 தங்கங்கள், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகியவற்றோடு 5வது இடத்திலும் உள்ளன.

2 தங்கங்களை வென்றுள்ள வடகொரியா, கஸகஸ்தான் ஆகியன 6வது, 7வது இடங்களிகளில் காணப்படுகின்ற அதேவேளை, அவுஸ்திரேலியா, பிரேஸில், ஹங்கேரி, நெதர்லாந்து, ரஷ்யா, ஜோர்ஜியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கத்தோடு தொடர்ந்து வரும் இடங்களில் உள்ளன.

லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற 30ஆவது ஒலிம்பிக் திருவிழாவில் இதுவரை 30 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன. எனினும் இலங்கை மற்றும் இந்தியா இதுரை எந்தவொரு பதக்கத்தையும் பெற்றிருக்கவில்லை.

Filed in: உலகம்
Website Apps