விதார்த் வேறு முகம் காட்டும் “ஆள்” (படங்கள் இணைப்பு)

all_003
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு தயாரிக்கும் “ஆள்” படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
விதார்த், அறிமுகநாயகி ஹார்திகா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை பார்க்கும் ஓர் ‘ஆள்’ தன் காதலியை பார்க்க சென்னை வருகிறார்.

விமான நிலையம் வந்திருந்தவரிடம் முகம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் ஒரு செல்போனைக் கொடுத்துவிட்டு போகிறார்கள். எதிர்முனையில் பேசுகிறவர் அந்த ஆளை இனிமேல் எங்கே போகவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று மிரட்டி வழிநடத்துகிறார்.

இந்த மிரட்டல் பயணம் காலை முதல் மாலை 6 மணி வரை தொடர்கிறது. காலை முதல் அந்த ஆள் சென்னை நகர் முழுக்க சுற்றி என்ன செய்கிறார்? செய்ய வைக்கிறார்கள் என்பது தான் ‘ஆள்’ படக்கதை.

யார் அப்படி வழி நடத்துகிறார்கள், ஏன் மிரட்டுகிறார்கள் என்பது சஸ்பென்ஸ். முடிவு பார்க்கிற அனைவரையும் அதிரவைக்கும்.

ஒரு சாதாரண ஆளாக பயணத்தை தொடங்கும் அவன் மாலையில் என்னவாகிறான். ஒரு நாளில் நடக்கும் கதையின் இறுதியில் அவன் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறான்.

எதார்த்த நாயகன் விதார்த்தை இதுவரை கிராமத்து பாமர பாத்திரங்களில்தான் பார்த்திருக்கிறோம். இதில் படம் முழுக்க போட்ட கோர்ட்டை கழட்டாமல் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆனந்த கிருஷ்ணன் சுசி கணேசனிடம் திரைப்பாடம் பயின்றவர். சிக்கிம் மாநிலத்தில் இந்தோசீனா எல்லைப்பகுதியில் சிரமப்பட்டு அனுமதி பெற்று படமாக்கியுள்ளார்.

படத்திற்கு இசை JOHAN.நான்கு பாடல்கள் டூயட் எதுவும் இல்லை.வாலி,நா.முத்துகுமார், கார்க்கி எழுதியுள்ளனர்.

முழுநீள ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு என்.எஸ்.உதயகுமார். இவர் ஏகாம்பரத்தின் உதவியாளர்.படத்தின் பெரும்பகுதி 3 கமெராக்களைக் கொண்டே படப்பதிவு செய்துள்ளார்.மொத்தம் 55 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகவும் முயற்சிகள் தொடர்கின்றன. Time freeze என்கிற புதிய தொழில் நுட்பம் இந்தியாவிலேயே இப்படத்தில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் சில நடிகர்களுடன் திரைக்கதையும் பல்வேறு பட்ட லொக்கேஷன்களும் முக்கியமான பாத்திரங்களாக இருக்கும்படி படம் வடிவமைக்கப்பட்டுள்ளது புதுமை.

படப்பிடிப்பு முடிந்து இறுதி மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் இந்த “ஆள்” திரைக்கு வந்து கலக்குவான்.உங்கள் உள்ளங்களை உலுக்குவான் என்கிறது பட வட்டாரம்.

all_001

all_002

all_003

all_005

Filed in: சினிமா
Website Apps