ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வலை டிரைலரை கொடுக்கும் தல அஜீத்

yarlminnal
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்துக்கு வலை என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் விறு விறுப்பாக நடந்தது.

தற்போது இப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அஜீத் பிறந்த நாளான மே 1-ந்தேதி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அஜீத் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை ரசிகர்கள் ரத்து செய்து விட்டனர்.

அதற்கு பதில் வலை பட டிரெய்லரை ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் அஜீத்தின் கெட்டப் இதுவரை வெளியாகவில்லை. எனவே அஜீத் கேரக்டர் எப்படி இருக்கும் என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மே 1-ல் ரசிகர்கள் ஆர்வத்தை டிரெய்வர் பூர்த்தி செய்ய வருகிறது.

Filed in: சினிமா
Website Apps