‘தலைவா’ அரசியல் படமே இல்ல… : விஜய் அன்கோவின் ‘அவசர…’ அறிக்கை

yarlminnal.com (2)
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

நாளை மறுநாள் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாக இருந்த விஜய்யின் ‘தலைவா’ படத்துக்கு திடீரென்று ரிலீஸ் நேர சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘தலைவா’ படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று சென்னையிலுள்ள பிரபல தியேட்டர்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

மேலும் இது ஒரு பக்காவான அரசியல் படம் என்றும் விஜய் இந்தப்படத்தில் ஒரு மிகச்சிறந்த நேர்மையான அரசியல்வாதியாக படத்தில் வருகிறார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இந்த செய்திகளை அதிரடியாக மறுத்திருக்கிறார் விஜய். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் கூறியிருப்பதாவது :

‘தலைவா’ படம் அரசியல் படம் என்றும், அரசியல்வாதிகளை தாக்கி எடுக்கப்பட்ட படம் என்றும் சில விஷமிகளால் வந்ததிகள் பரப்பப்பட்டு உள்ளன. ஆனால் அதில் உண்மையில்லை. ‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான படம். இப்படத்தில் லவ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் உண்டு.

ஆனால் யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்பவேண்டாம், இது துளி கூட அரசியல் கலக்காத சமூகப்படம் என்று விஜய் தெரிவித்துள்ளார். டைரக்டர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் இதையே கோரஷாக தெரிவித்துள்ளனர்.

ரிலீஸ் சிக்கலுக்கு என்ன காரணம்னு இப்போ உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்குமே விஜய்..?

Filed in: சினிமா
Website Apps