ஒலிம்பிக் பதக்கப்பட்டியல் சீனாவை முந்தியது அமெரிக்கா

2e5327af3cc81ac4000b6b514f19b1e5
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

லண்டனில் நடைபெற்று வரும் 30வது சர்வதேச ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்கப்பட்டியலில் மீண்டும் சீனாவை முந்தி அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

போட்டிகள் ஆரம்பமாகிய நாட்களில் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆயினும் அமெரிக்கா சீனாவுடன் மிகச் சொற்ப எண்ணிக்கை வித்தியாசத்தில் பதக்கப்பட்டியலில் போட்டி போட்டவாறு இருந்தது. இரு நாடுகளும் பதக்கங்களை வென்று வந்த நிலையில் சீனா மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது. இந்நிலையில் நேற்றைய நாள் முடிவில் அமெரிக்கா முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது.

39 தங்கங்கள், 25 வெள்ளிகள், 26 வெண்கலங்களுடன் சேர்த்து 90 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 34 தங்கங்கள், 22 வெள்ளிகள், 25 வெண்கலங்களோடு நேற்றைய நாளை தொடங்கிய அமெரிக்கா 5 தங்கங்கள், 3 வெள்ளிகள், ஒரு வெண்கலத்தை வென்று முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது.

36 தங்கங்கள், 22 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு நேற்றைய நாளை தொடங்கிய சீனா, ஒரு தங்கம், 2 வெள்ளிகளை மட்டும் பெற்று 37 தங்கங்கள், 24 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு 80 பதக்கங்களோடு இரண்டாவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் எந்தவிதப் பதக்கங்களையும் பெறாது நேற்றைய நாளை 22 தங்கங்கள், 13 வெள்ளிகள், 13 வெண்கலப் பதக்கங்களோடு தொடங்கிய பிரிட்டன் நேற்று 3 தங்கங்கள், ஒரு வெண்கலத்தைப் பெற்று 25 தங்கங்கள், 13 வெள்ளிகள், 14 வெண்கலங்களோடு மொத்தமாக 52 பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.

Filed in: உலகம்
Website Apps