அவருக்கு நாலு, எனக்கு ரெண்டா? விஜய் கோபம், படம் பணால்!

download
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

கவுதம்மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’படம் கைவிடப்பட்டதாக தகவல். சமீபத்தில் கவுதமை அழைத்த விஜய், ‘இப்போதைக்கு இந்த படம் வேணாம்னு ஃபீல் பண்றேன். பிறகு கூப்பிடும்போது வாங்க’ என்று கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொள்ளவில்லை கவுதம். சட்டென்று மூளைக்குள் மின்னலாக புரிந்துவிட்டதாம் அவருக்கு. சூர்யாவை வைத்து ‘துப்பறியும் ஆனந்தன்’ என்ற படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் கவுதம். இதற்காக சூர்யாவுக்கு நாலு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்தாராம். ஆனால் யோஹன் விஷயமாக விஜய்க்கு கொடுக்கப்பட்ட முன் பணம் வெறும் ரெண்டே ரெண்டு கோடி. இதுதான் விஜய்யின் கோபத்திற்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம்.
தண்ணிய எட்டி மிதிச்சா ‘தைஸ்’சுக்குதான் சேதம்னு யாருங்ணா சொல்றது அவருகிட்ட?

Filed in: சினிமா
Website Apps