வங்கியில் இட்ட தங்கம் பித்தளையானது

download (1)
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

தங்கமுலாம் பூசிய போலி நகையை வங்கியில் அடைவு வைத்தவர் பணத்துடன் தலைமறைவானார். ஒருவருடமாகியும் அடைவு மீட்கப்படாததால் நகையைப் பரிசோதித்த போதே அது போலி நகை என்பதனை வங்கியாளர்கள் உணர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர் என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா
தெரிவித்தார். தற்போது தலைமறைவாகியிருக்கும் நபர் கடந்த வருடம் குறித்த நகையை யாழ்ப்பாணத்திலுள்ள வங்கி ஒன்றில் அடைவு வைத்தார். அதனைப் பரிசோதனை செய்த வங்கி அதிகாரிகளும் அதனைப் பெற்றுக் கொண்டு அடைவுக்குரிய பணத்தைக் கொடுத்துள்ளனர்.அவரது அடையாள அட்டை இலக்கம் முகவரி உள்ளிட்ட ஆவணங்களையும் வங்கியாளர்கள் பெற்றுக் கொண்டு அடைவுப் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஒரு வருடம் கழிந்த நிலையில் அடைவு வைத்த நகையை உரியவர் மீட்கவில்லை.

அவரது பதிவுகளின் படி தகவல் அறிவிக்க முற்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை. அதன் பின்னரே அடைவு வைத்தவர் பதிவு செய்த தரவுகள் அனைத்தும் பொய்யானவை என்பது தெரிய வந்தது.பின்னர் அவர் அடைவு வைத்த நகையைப் பரிசோதித்த போது அது தங்க முலாம் பூசிய போலிநகை என்பதனை வங்கியாளர்கள் அறிந்து கொண்டனர். கடந்த வாரம் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் இதுவரை இனங்காணப்படவில்லை. பொலிஸார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை கடந்த வருடமும் இதே பாணியில் யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய இடங்களிலுள்ள அடைவு நிலையங்களில் போலிநகைகளை அடைவு வைத்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Filed in: யாழ்ப்பாணம்
Website Apps