தனுஷ் படத்தில் பாடிய ஏ,ஆர், ரஹ்மான்!

download (1)
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

அ‌ரிதாகவே படங்களுக்கு இசையமைக்க ஒத்துக் கொள்வார். அதேபோல் அவர் ஒத்துக் கொண்டப் படங்களின் பாடல்களும் அ‌ரிதானவையாகவே இருக்கும். நாம் சொல்வது ஏ.ஆர்.ரஹ்மானை என்பது பிறந்த குழந்தைக்கும் தெ‌ரியும்.

உலகம் சுற்றினாலும் உள்ளூ‌ரில் கலக்கும் ஆசை எந்த பயில்வானுக்கும் இருப்பதைப் போலவே ரஹ்மானுக்கும். ஆஸ்கர் வரைப் போனாலும் அமைஞ்சிக்கரை ரசிகனை திருப்த்திப்படுத்த வேண்டும் என நினைப்பவர். இதனால் கடல், ஐ, ம‌ரியான் என்று மூன் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்கிறார். யோஹன், துப்பறியும் ஆனந்த் வெயிட்டிங்கில்.

ம‌ரியான் படத்தை ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்குகிறார். தனுஷ் ஹீரோ. பார்வதி மேனன் ஹீரோயின். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான் விழித்தெழு நெஞ்சே என்றப் பாடலை தனுஷுக்காக பாடியிருக்கிறார். இதுவரை ரஹ்மான் பாடிய பாடல்கள் அனைத்தும் காதை குளிர்வித்து நெஞ்சை நிறைத்திருக்கின்றன. இந்தப் பாடல் மட்டும் சோடை போகுமா என்ன.

Filed in: சினிமா
Website Apps